ALAIKIRAR ALAIKIRAR ANBAAI INDRE UNNAI – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்
சரணங்கள்
1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
கெட்ட குமாரனைப்போல்
பாவத்தின் சம்பளம் மரணமே
பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்
2. உந்தன் நீதி கந்தையாகும்
உன்னில் நன்மை ஒன்றில்லை
பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
பாவியை நேசித்தார் — அழைக்கிறார்
3. பாவங்களை மறைப்பவன்
பாரில் வாழ்வை அடையான்
சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
சங்காரம் அடைவார் — அழைக்கிறார்
4. நானே வழி சத்தியமும்
நித்திய ஜீவன் என்றார்
இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்
5. காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைச் சந்திக்கும் வேளையிதே
தேடி நீ வாராயோ — அழைக்கிறார்