Alleluya En Aathumavae Kartharai – அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
1 அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
2 நான் உயிரோடிருக்குமட்டும்
கர்த்தரைத் துதிப்பேன்
நான் உள்ளளவும் என் தேவனைக்
கீர்த்தம்பண்ணுவேன்.
3 பிரபுக்களையும்,
இரட்சிக்கத்திராணியில்லாத
மனுபுத்திரனையும்
நம்பாதேயுங்கள்.
4 அவனுடைய ஆவி பிரியும்,
அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்,
அந்நாளிலே அவன் யோசனைகள்
அழிந்துபோம்.
5 யாக்கோபின் தேவனைத் தன்
துணையாகக் கொண்டிருந்து,
தன் தேவனாகிய கர்த்தர்மேல்
நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
6 அவர் வானத்தையும் பூமியையும்
சமுத்திரத்தையும்
அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர்,
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
New Version
அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி
1. நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனைத் துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன்
2. நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான்
3. என் ஆத்தும தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னைக் காத்திடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
4. கர்த்தர் சதா காலமும்
அவர் சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாய் அவரே
இராஜரீகம் பண்ணிடுவார்