Azhagil Siranthavare – அழகில் சிறந்தவரே Song lyrics
இயேசுவே ……… அழகில் சிறந்தவரே
சாரோனின் ரோஜாவே
சூரியனைப்போல முகம் உள்ளவரே
நான் என்ற ஆலயத்தில் வாரும் ஐயா (என்னை)
பாவம் நீக்கி அழகாக மாற்றுமையா
அழகே ………………. இயேசுவே
நான் செய்த பாவங்கள் சுமந்து
சிலுவையில் அழகை இழந்தார்
நாம் அவரை விரும்பத்தக்க அழகு
இயேசுவுக்கு இல்லாமல் போனது
இரத்தத்தில் மூழ்கிய லீலி மலரே
இது தானே இயேசுவின் நிஜ அழகு
அழகே ………………. இயேசுவே
தேவனின் ரூபமாயிருந்தும்
மனிதனின் சாயலாய் மாறினார்
பாடுகள் சிலுவையில் இருந்தும்
மௌனமாய் யாவையும் சகித்தார்
ஆட்டுக் குட்டியைப்போல சாந்தமானவர்
இது தானே இயேசுவின் நிஜ அழகு
அழகே ………………. இயேசுவே