Chinna Chinna | சின்னச் சின்ன கண்மணியே Tamil Catholic Christmas Song@TamilCatholicChannel
Chinna Chinna | சின்னச் சின்ன கண்மணியே Tamil Catholic Christmas Song@TamilCatholicChannel
Chinna Chinna | சின்னச் சின்ன கண்மணியே Tamil Catholic Christmas Song
கிறிஸ்துமஸ் தாலாட்டு
தமிழ் கிறித்தவ பாடல்
Lyrics and Music: Fr.G.V.Panneer Selvam
Music Director: Anandha Geethan
Album: Vaanaga Seedhaname / வானக சீதனமே…
Producce: Fr.Thanjai Domi.
Video Editor: Paulraj, Thanai.
Christmas song
Lyrics:
சின்ன சின்ன கண்மணியே
செம்பவள பொன்னழகே
செல்லமே உனக்கு ஒரு தாலாட்டு
கன்னித் தமிழ் பாவெடுத்து
கண்ணுறங்கும் பாலகனே
கண்ணே உனக்கு ஒரு தாலாட்டு
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ – 2
பொங்கி வரும் பொன்னிநதி போல – எங்க
தங்கமே தரணி வந்தாயோ
தேனுதிரும் புது மலர் போல – அன்பு
அன்னைமடி தவழ வந்தாயோ …
மன்னவா மன்னவா மாட்டுக் குடிலில் வந்தவா
செல்லமா செல்லமா சித்திர புன்னகை சிந்தவா
I
ஒளியில் உலகம் மலர்ந்ததே இருளும் விலகியதே
இரவும் இரவில் முடிந்ததே இதயம் விடிகின்றதே
மன்னவனே மாபரனே மண்ணில் வந்த வண்ண நிலவே
மரகதமே மாணிக்கமே மங்காத மணிவிளக்கே
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ – 2
2
காலம் இனிதாய் கனிந்ததே வாழ்வு வழிகிறதே
ஞாலம் எல்லாம் மகிழ்ந்ததே வானம் பொழிகிறதே
கனியமுதே கற்பூரமே கார்கால மலர்வனமே
சின்னவனே சிங்காரமே வானக சீதனமே
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ – 2
For more videos visit our channel at: https://www.youtube.com/channel/UCJYWbaqI9HcZmj4glT6QQUA
Tamil Christian songs lyrics