Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில்

Deal Score+1
Deal Score+1

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில்

பல்லவி

தேவ தயாபரனைத் – துதிப்பதில்
ஓய்வதில்லை இனிமேல்

சரணங்கள்

1 அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்
அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே— தேவ

2 அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கி
அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார்– தேவ

3 கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னை
எண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்– தேவ

4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கி
என்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே
— தேவ

5 மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில்
மணவாட்டியாக நானும் வானத்திலே சேர்ந்திடுவேன்— தேவ

6 எப்படிப் போற்றுவேனோ என்னரும் நேசரையே
ஏத்தியே எப்பொழுதும் தோத்திரங்கள் ஏறெடுப்பேன். — தேவ

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo