Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன்

Deal Score0
Deal Score0

பல்லவி

தேவே கண்ணோக்குமேன் – என்
தீய நெஞ்சை மாற்றுமேன்!

அனுபல்லவி

கோவே! உம்மைப்போல என்னை
கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க

சரணங்கள்

1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்
உருகி வாறேனையனே
தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி
தாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே

2. நொந்துடைந்த எந்தன் மனம்
உந்தனுக்கு குகந்ததே
தந்தையே! எனைத் தள்ளாது
சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே

3. ஆத்மா தேகம் ஆவியும் என்
அன்பனே படைக்கிறேன்
பாத்திரமான பலியாய்
ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை! – தேவே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo