Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே

Deal Score0
Deal Score0

1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பா
பூமியிலுள்ள மனுஷரெல்லாம்
ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பா
இயேசு முன்னே சேருவார்கள்

2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள்
சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பா
கர்த்தனேசைச் சேர்ந்திடுவார்

3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலே
மோசமுள்ள தீ நரகில் – என் நண்பா
நாசமாகத் தள்ளிடுவார்!

4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில்
நெறி தவறிப் போகாமலே – என் நண்பா!
சரிவரவே வேதங் கேளாய்!

5. தீயகுணப் பாதகரும் – மாயகுணப் பேதைகளும்
பேயினுட தூதர்களும் – என் நண்பா!
போயழிவார் தீ நரகில்!

6. அண்டபரனை மறந்து கண்டதெல்லாம் தெய்வமென்று
தெண்டனிட்ட பாவியெல்லாம் – என் நண்பா!
சென்றழுவார் தீ நரகில்

7. ஓடுவார்க ளங்குமிங்கும் – சாடுவார்கள் தாகத்தாலே
தேடுவார்கள் தண்ணீரையே – என் நண்பா!
வாடுவார்கள் கிட்டாமலே!

8. தள்ளை தந்தை யானவர்கள் – பிள்ளைகளைப் பார்த்தழுவார்
துள்ளித் துள்ளிப் பார்த்தழுவார் – என் நண்பா!
எள்ளளவு மோயமாட்டார்!

9. ஐயையோ, சொல்வதெல்லாம் பொய்யல்லோ என்றிருந்தோம்
தீயல்லோ பிடித்ததென்பார் – என் நண்பா!
பேயல்லோ கெடுத்ததென்பார்!

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo