Dhinamae Naan Unnai – தினமே நான் உன்னை

Deal Score0
Deal Score0

தினமே நான் உன்னைத் தேடிப் பணிய

பல்லவி

தினமே நானுனைத் தேடிப்பணியச்
செயும்துணையே நித்ய ஏக தெய்வமே.

அனுபல்லவி

மனநிலை தவறி மருகினேன் நானே
மாசிலானே அனுகூலநற் கோனே- தின

சரணங்கள்

1.அருள் நாயகனே அம்பரத் தீசா
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா
மருள்பவ நாசா மனுக்குல ராசா
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா!- தின

2.செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்
தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்
முத்தே யென் நன்மைக் காக மரித்தாய்
மோதிய தீவினை யாவும் அழித்தாய்.- தின

3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்
தீமை மறந்துநான் சீர்பெறக் கூராய்
கரள் குணமாற்றிக் கனிதெனைச் சேராய்
களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்.- தின

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo