Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே
1. மண்ணின் வாழ்வு மாயையாகும்
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவை
மாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்
2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்
3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்
4. தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடந்திட
தேவாவியானவர் உதவி செய்வார் — எக்காலத்தும்
5. முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயல் மாறியே
தேவாதி தேவனை துதித்திடுவேன் — எக்காலத்தும்