Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி

Deal Score0
Deal Score0

பல்லவி

எழந்தருளும் ஏசு சுவாமி

அனுபல்லவி

விழுந்தலகை அழிந்தொழியத்
தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே

சரணங்கள்

1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா
ரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே – எழுந்

2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற
அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந்

3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சே
ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே- எழுந்

4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி
சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க- எழுந்

5.வேதாளம் நடுங்கி விழ,விண்ணோர் திரண்டு தொழ
பாதாளம் இடிந்து விழப் பராபரனே, எழுந்தருளும்- எழுந்

6.விஸ்தார உலகமதில்,மெய்யான திருச்சபையில்
இஸ்தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக- எழுந்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo