En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே
என் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்பு கூறுவேன்
என் கன்மலையும் என் கோட்டையும்
என் இரட்சகரும் என் தேவனும்
நான் நம்பியிருக்கும் துருகமும்
கேடகமும் நீர் தானைய்யா
நீர் எந்தன் வாழ்வில் வந்ததால்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
உந்தன் நாமம் அறிந்ததால்
தோல்வியே இனி இல்லையே
பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
என்னோடு கூட வருபவரே
உம்மில் அன்பு கூறுவேன்
கொடிய வேடனின் கண்ணிக்கிம்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
விடுவித்தெம்மை மீட்டவரே
உந்தன் நாமம் உயர்த்துவேன்
தாழ்வில் என்னை நினைத்தவரே
தாயின் கருவில் அறிந்தவரே
தாகம் தீர்க்கும் நீருற்றே
உந்தன் மகிமையை பாடிடுவேன்