Engum nirai yesu Devanae Lyrics – எங்கும் நிறை இயேசு தேவனே
எங்கும் நிறை இயேசு தேவனே
எந்நாளும் உம்மையே
போற்றிப் பாடுவோம்
பாடல்களில் பிரியம் நீர்
பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர்
எழுச்சியோடே பாடுவோம்
இயேசுவைப் பாடுவோம்
1.பூமியின் குடிகளே
கெம்பீரமாய் பாடுங்கள்
இயேசுவைப் பாடுங்கள்
மகிழ்வுடனே துதித்து
ஆராதனை செய்து
ஆனந்த சத்தத்தோடே
சன்னதி முன் வாருங்கள்
2.இரட்சண்யக் கூட்டத்தார்
பாட்டுப்பாடுகின்றார்
அவர் நடனமாடுகின்றார்
நித்திய மகிழ்ச்சி
தலையின் மேல் இருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும்
3.இயேசுவே இரக்கமும்
உருக்கமான தேவன்
அவர் ஆசீர்வதிக்கும் தேவன்
அவரையே பணிந்து
ஆவியிலே நிறைந்து
ஆபிரகாம் மடிக்கு
சென்றிடுவோம் வாருங்கள்