Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன்
பல்லவி
என்ன காணிக்கை படைப்பேன்? – நான்
இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில்
அனுபல்லவி
பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை
என்னுயிரைவிட யாதுண்டு வேறே
1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனி
எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்
தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்
தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன
2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்ய
ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல
சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல
தேவா துணை புரி சாட்சி நான் சொல்ல – என்ன
3. என்னில் தங்கி அரசாள்வீர் – எந்தன்
இருதயத்தில் மெய்ச் சந்தோஷத்தைத் தருவீர்
மன்னா வாசலைத் திறந்தேன் நீர் வாரீர்
மகத்துவமாக நீர் பிரகாச மீவீர் – என்ன