என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழிநடத்த
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்
2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்
6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா
7.புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்