Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே
என்னை மீட்க வந்தவரே
இந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரே
என்னை மீட்க வந்தவரே
இருளை வெளிச்சமாக்க வந்தவரே
ஒரு வழியாய் வந்த எதிரிகளை
ஏழு வழியாக துரத்தி அடித்தாரே
ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன்
ஆனாலும் என்னை நேசித்திரே
கிருபையாலே ரட்சித்து என்னை
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே
உம் ரத்தம் சிந்தினீரே
அன்புக்கு ஈடில்லையே
உம் ரத்தம் சிந்தினீரே
அந்த அன்புக்கு ஈடில்லையே
உலக பாவத்தை வெறுத்து
உமக்காக வாழுவேன்
வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன்
உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல
உள்ளதை அவர் பார்க்கின்றாரே
பொன்னும் கேட்கல பொருளையும் கேட்கல
உன்னை மட்டும் தான் கேட்கின்றாரே
உன்னக்காக பிறந்தாரே
தன்னையே தந்தாரே
உன்னக்காக பிறந்தாரே
அவர் தன்னையே தந்தாரே
பாலனாய் பிறந்து
சிலுவையில் தந்து
இன்றும் நமக்காய் ஜீவிக்கின்றார்
வியாதி நீங்குதே வறுமை எல்லாம் மாறுதே
அற்புதங்கள் நடக்கின்றதே
கவலை நீங்குதே கண்ணீர் யெல்லாம் மறையுதே
கிறிஸ்து எனக்குள் வந்ததினாலே
ஆபிரகாம் தேவன் நீரே
ஈசாக்கின் தேவன் தானே
ஆபிரகாம் தேவன் நீரே
அவர் ஈசாக்கின் தேவன் தானே
பல ஆயிரம் ஆயிரம் நன்மைகளாலே
ஆசிர் வதித்து நடத்திடுவார்