என்னை தேடிவந்த மாநேசரே – Ennai Thedi Vandha Maa Naesarae lyrics
என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னை காண்பவரே-2
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் -2 -என்னை தேடி
மாறாத அன்பாலே – என்னை
நீர் இழுத்துக்கொண்டீர் -2
தூரம் போன சோரப்பிள்ளை-என்று
என்னை நீர் தள்ளவில்லை-2 -உம்மை துதிப்பேன்
என்னையும் கண்ணோக்கி-என்
எளிமையில் உயர்த்தினீரே-2
உந்தன் கண்களில் தயவு கிடைக்க
என்னில் நீர் என்ன கண்டீர்-2 -உம்மை துதிப்பேன்