Ennai Vidatheyum – என்னை விடாதேயும்
1.என்னை விடாதேயும்,
கர்த்தாவே, மோட்சம் மட்டும்
உமது கைகளால்
இப்பிள்ளையை நடத்தும்
மகா இரக்கமாய்;
நீர் என் வெளிச்சமும்
என் பாதுகாப்புமே,
என்னை விடாதேயும்.
2.என்னை விடாதேயும்
நான் பாவத்தில் விழுந்து
கெடாப்படிக்கு நீர்
ஒத்தாசையாய் இருந்து
நீர் உமதாவியால்
என்னைத் திடத்தவும்,
அன்புள்ள கர்த்தரே,
என்னை விடாதேயும்.
3.என்னை விடாதேயும்
என்றும்மைக் கருத்தாக
நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
பிசாசு பலமாக
என்னை நெருங்கினால்
நீர் துணையாயிரும்
என் சோதனைகளில்
என்னை விடாதேயும்.
4.என்னை விடாதேயும்
அன்பாக என்னைப் பாரும்;
என் கையின் வேலையை
ஆசீர்வதித்து வாரும்;
நீர் கற்பித்தபடி
எல்லாம் நான் செய்யவும்
என் வேலை வாய்க்கவும்;
என்னை விடாதேயும்.
5.என்னை விடாதேயும்,
உமக்குச் சொந்தமாகப்
பிழைத்து என்றைக்கும்
நான் விசுவாசமாக
உம்மில் நிலைக்கவே
என்னைக் காத்தருளும்;
கடை இக்கட்டிலும்
என்னை விடாதேயும்.