எண்ணி எண்ணிப் பார்-Enni Enni Paar
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – எண்ணி
1.தண்டிக்கப்பட்டார் (நாம்) மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – நன்றி
2. காயப்பட்டார் (நாம்) சுகமாக
நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால்
3. சாபமானார் (நம்) சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொண்டோம் சிலுவையினால்
4. ஏழ்மையானவர் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார்