Ennodu Paesum Yesuvae – என்னோடு பேசும் இயேசுவே song lyrics
என்னோடு பேசும் இயேசுவே
நீர் வந்து பேசாதிருந்தால்
என் வாழ்க்கை தொலைந்துபோகுமே
என் வாழ்க்கை சிதைந்து போகுமே
தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ
தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ
நான் உந்தன் குழந்தை அல்லவோ
என்னோடு பேசமாட்டீரோ ?
உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது
உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
அவைகளோடு பேசினீரே
என்னோடு பேசமாட்டீரோ ?