ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics
என்னோடு பேசும் இயேசய்யா
உம்பாதம் வந்துள்ளேன் ஐயா
தூரமாய் போனேன் நானய்யா
இப்போது வந்துள்ளேன் ஐயா
நீ இல்லாம வாழ முடியாதையா
என் கிட்ட வாங்க இயேசய்யா
நீரே வேண்டுமையா
என்னோடு பேசும் இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா-2
1 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயா
உம் குரல் கேளாமல் போனேன் ஐயா
மாயையை நம்பி உம்மை மறந்தேனையா
மெய்யான வழியே நீர் தானையா
ஜீவ ஊற்று நீர் தானையா
என்னை தேற்றும் தெய்வம் நீர் தானையா
2. என் தாயின் கருவில் உருவாகும் முன்னே
என் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர் நீரே
என்னை பேர் சொல்லி அழைத்தவர் நீரே
உம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டேனே
இந்த மாய உலகம் எனக்கு வேண்டாமே
உம் அன்பிற்க்கீடாய் எதுவும் இல்லையே