Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics

Deal Score0
Deal Score0

LYRICS:-

என்னுள்ளமே என்றென்றுமாய்
எந்நாளும் பாடியே போற்றுவாய்
சார்ந்து அவரை ஏகுவாய்
இயேசுவே உன் தஞ்சமே

உந்தனின் தேவனே என்றுமாய்
தாங்கியே காப்பவர்
தாயினும் அன்புடன்
தாங்கி ஏந்தி சுமப்பவர்
– என்னுள்ளமே

உன்பேரில் கண்களை வைத்துமே
உந்தனை நடத்துவார்
ஆறுதல் அளிப்பவர்
என்றும் அவரை நம்பிடுவாய்
– என்னுள்ளமே

உன் சத்தம் கேட்டதும் இயேசுவே
இரங்கியே பதில் செய்வார்
தேவனில் அமர்ந்திரு
நம்பும் நன்மை வந்தடையும்
– என்னுள்ளமே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo