என்னுயிரே என்னுயிரே-Ennuyirae Ennuyirae
என்னுயிரே என்னுயிரே
என் இதயத்தில் வாழ்பவரே
பேச்சினிலும் என் மூச்சினிலும்
நினைவிலும் கலந்தவரே
நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்
இயேசு இயேசுசென்று சொல்லிடுதே
ராவிலும் பகலிலும் இருதயமும்
என் இயேசுவுக்காக துடிக்கிறதே
உள்ளமெல்லாம் உடலெல்லாம்
உம் நினைவாய் இருகின்றதே
எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
எனக்காகவே மரித்துயிர்த்தீரே
இந்த செயலாலே என் இருதயத்தை
உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
உம் அன்பாலே நான் மயங்கி
உம்மை நேசிக்க துணிந்தேனே
இருளாய் கிடந்த தேகமெல்லாம்
தேவ ஆலயம் ஆகினதே – இனி
நானும் எனக்கு சொந்தமல்ல
எனதெல்லாமே இனி உம் சொந்தமே
இதயத்திலேயும் உம்மை தவிர
வேறு எவருக்கும் இடமில்லையே