Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே
பல்லவி
ஞான சுவிசேஷமே
நன்மை தரும் நேசமே
அனுபல்லவி
ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான
சரணங்கள்
1. சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே,
புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே. – ஞான
2. நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே,
சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2] – ஞான
3. அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும்,
மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும், – ஞான
4. யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும்,
பேசும் பவத்தைப் போக்கும், பேதைமையோரைக் காக்கும் – ஞான