இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் – Ilaipaarudhal Ellaiyengilum
இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் – Ilaipaarudhal Ellaiyengilum Tamil Christian Worship Song lyrics, Written, Tune and Sung by Pr Benz & Team
ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்(2)
நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்…
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்(2)
இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)
- யுத்தங்களும் ஓயும் ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்…
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் (2)
எதிர்ப்பவர் என்றும் எனக்கு இல்லை
வழக்காடுவோர் இனி எவருமில்லை (2) – நீர் சொன்ன
- செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும்…
கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் (2)
தகுதியே இல்லை என சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் (2) – நீர் சொன்ன
- சூழ்நிலைகள் மாறும் என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும்
சிறைச்சாலை திறக்கும் சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் (2)
விடை காண கேள்விக்கு பதில்கள் வரும்
தினம் தடையில்லா நன்மைகள் தேடி வரும் (2) – நீர் சொன்ன
இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் song lyrics,Ilaipaarudhal Ellaiyengilum song lyrics, Aanaiyittapadiyellaam song lyrics, Pastor Benz songs lyrics
Ilaipaarudhal Ellaiyengilum song lyrics in English
Aanaiyittapadiyellaam
Seithu udippeer
Um Vaakkuthathangal
Ellaam Niraivettruveer -2
Neer sonn nalvaarthai Niraiverum
Entrum Thavaramal
Niraivettrum Devan Neer -2
Ilaipparuthal Ennai Suttrilum
Ilaipaarudhal En Ellai Engilum -2
Ilaipaarudhal En Ellaiyengilum -2
1.Yuththangalum Ooyum
Eettikalaum Muriyum
Rathangal Akkiniyaal Sutterikkapdum
Yesekku Mudiyum
Sithnavum Mudiyum
Rehoboth Enakkaga Thungavapadum -2
Ethirppavar Entrum Enakku Illai
Valakkaduvor Ini Evarumillai – 2 – Neer sonna
2.Sengadalgal Thirakkum Kanmalaigal Pilakkum
Erihokkal Enakkaga Thagarapadum
Kattukalaum Udaiyum
Karpangalaum Uyirkkum
Kanneerkal Kalaippaga Maattrapadum -2
Thaguthiyae Illai Ena Solvoar Mun
Innum Tharamana uyarvugal Enakkalippeer -2
3.Soolnilaigal Maarum
En Thalaiyum Nimirum
Pagaithorin Kanmunnae Uyarvu Varum
Siraisaalai Thirakkum
Seer Vaalvu Pirakkum
Naan Seivathellaam Vaaikkapadum -2
Vidai Kaana Kealvikku
Pathilgal Varum
Thinam Thadaiyilla
Nanmaigal Theadi Varum -2 – Neer sonna