Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்
இருளில் இருக்கும் ஜனங்களும்
மரண திசையில் இருக்கும் மனிதரும்
வெளிச்சத்தை கண்டிட
ஒளியாய் வந்தீரே
இம்மானுவேல் என்னோடு இருப்பவரே
இயேசுவே பாவ இருள் நீக்கினீரே
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரே
உம்மை உலகம் அறியவில்லை
உம் சொந்தம் ஏற்கவில்லை
உம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர்
எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரே
என்னில் அன்புக்கூர்ந்ததினால்
என்னை தெரிந்து கொண்டதினால்
உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர்