Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான
1. இவ்வேழைக்காக பலியான
என் இயேசுவினுட தயை
நான் என்றும் நிற்கத்தக்கதான
உறுதியான கன்மலை
விண் மண் ஒழிந்தும் இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.
2. ரட்சிக்கப்படுவதற்காக
இரக்கமாய்த் தயாபரர்
நரரின் மனதை நன்றாக
தட்டிக்கொண்டேயிருப்பவர்
அதேனென்றால் இரட்சகர்
அனைவரையும் மீட்டவர்.
3. அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே
குணப்படும் எல்லார்க்குமாக
பாவமன்னிப்புண்டாகுமே
ஆ, இயேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.
4. ஆ, அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்
திகில் என் பாவங்களுக்காக
வந்தால், அவரை நோக்குவேன்
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.
5. வேறாறுதல் எல்லாம் போனாலும்
வேறெதுவும் என் ஆவிக்கு
ஆறுதலைக் கொடாவிட்டாலும்
நான் அவரண்டை சேர்வது
என் நோவை முற்றும் ஆற்றுமே
இரக்கம் அவரில் உண்டே.
6. இம்மண்ணில் தொந்தரையினாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்
என் பாரம் மிகுதியானால்
என் இயேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.
7. நான் எந்த நன்மையைச் செய்தாலும்
அதில் என் பலவீனத்தை
நான் கண்டுணருவதினாலும்
நான் ஏங்கும்போதென் மனதை
என் இயேசுவின் இரக்கமே
திரும்பத் தேற்றிக்கொள்ளுதே.
8. நான் உயிரோடிருக்குமட்டும்
நீர் கர்த்தரே, என் நம்பிக்கை
என் விசுவாசம் உம்மைப் பற்றும்
இதே என் பிரதிக்கினை
எனதடைக்கலம் நீரே
இரக்கமுள்ள இயேசுவே.