Jeba Aaviyai Thara vendumae Lyrics
ஜெப ஆவியை தர வேண்டுமே
ஜெப தாகம் எனக்குள்ளே இன்னும் தருமே – 2
நீதிமானின் முழங்கால்கள் தோற்பதில்லையே
போராடும் முழங்கால்கள் தோற்பதில்லையே – 2
முழங்கால் யுத்தம் ஜெயிக்கும்
ஜெபமே ஜெயமே – 2
1. யூத குலத்து எஸ்தரைப் போல
உபவாசித்துக் கதற வேண்டுமே – 2
என் ஜனங்களை அழிக்க வேண்டாம்
என் தேசத்தை இரட்சியுமே – 2
2. அப்போஸ்தலர் பவுலைப் போல
ஆத்தும பாரம் எனக்கு வேண்டுமே
ஜீவனுக்கீடாய் ஜனத்தை
அனுதினம் தந்திடுமே
3. ஜெப வீரர் இயேசுவைப் போல
இரா முழுதும் ஜெபிக்க வேண்டுமே
கண்ணீரை விதையாய் மாற்றி
எழுப்புதல் பார்க்கணுமே
4. தேவ மனிதன் எலியாவைப் போல
வைராக்கியமாய் ஜெபிக்க வேண்டுமே
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் (தேசங்கள்) பணியட்டுமே
5. தீர்க்கதரிசி எரேமியா போல
என் கண்கள் குளமாய் மாற வேண்டுமே
திறப்பின் வாசலில் நின்று
புலம்பி ஜெபிக்கணுமே
6. இந்திய தேசம் உந்தன் கைகளிலே
தமிழ் நாட்டை நினைத்திடுமே
ஆளுகை செய்பவர் நீரே
உம் சித்தத்தை நடத்திடுமே