Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய்

Deal Score0
Deal Score0

பல்லவி

பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர், வந்து பாரீர்-பாரில்!

அனுபல்லவி

தீவினை தீர்க்கும் தேவமரியின்
திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம்

சரணங்கள்

1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம்

2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி-நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம்

3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர்,-பாரில்! – பாவம்

4. ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
அறுதி[1] யடைவர்; வேறொருநதிக்
கலையார், தேடி யலையார்,-பாரில்! – பாவம்

5. நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட,-பாவி – பாவம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo