Jeeva Thannirandai – ஜீவ தண்ணீரண்டை
1. ஜீவ தண்ணீரண்டை – இயேசு
கொண்டு சேர்ப்பார்,
பாவத்தில் ஜீவித்த என்னை;
அங்கே பார்வை பெற்றேன்
வெளிச்சம் காண்கிறேன்
ஜீவ தண்ணீர்களண்டையில்
பல்லவி
ஜீவ தண்ணீர்களண்டையில்
ஜீவ விருட்சமும் உண்டாம்
வெளிச்சத்தில் வாழ்ந்து
போராடுவேன் என்றும்
ஜீவ தண்ணீர்களண்டையில்
2. இயேசு தான் என் சொந்தம் வேறாரும் வேண்டாமே
ஜீவ தண்ணீர்களண்டையில்
அவர் என்னைத் தாங்கி இரட்சிப்பார் என்றுமே
ஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ
3. இங்கே யுத்தம் நின்று அங்கிளைப்பாறுவேன்
ஜீவ தண்ணீர்களண்டையில்
சுத்தரோடு நின்று – தூதர்பண் பாடுவேன்
ஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ