Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே FMPB song lyrics
காலம் வேகமாய் ஓடுதே
கருத்தில்லாமல் வாழ்கின்றேன்
கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட
உதவி செய்யும் தேவா! – எனக்கு
உணர்வு தாரும் தேவா
உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்கு
வெளி வேஷம் என்றும் வேண்டாம்
மறுரூப வாழ்வைத் தந்து என்னை
குணவானாய் மாற்றிவிடும்
கல்வரிக் காட்சி கண்டேன் – அந்த
காயங்கள் என்னால் என்றேன்
அன்பின் ஆழம் கண்டு – அந்த
அன்புக்கு அடிமை என்றேன்
கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு
ஜெபத்தின் ஆவி தாரும்
கிருபையின் காலம் இப்போதும்
இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்