Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்
1. களிப்புடன் சாஸ்திரிகள்,
மின் வெள்ளியை கண்டனர்;
அதன் ஒளி வழியாய்
பின்சென்றா ரானந்தமாய்
அதைப் போல கர்த்தரே,
எங்களை நடத்துமே
2. வானம் புவி வணங்கும்,
நாதரை பணியவும்;
தாழ்ந்த முன்னணையண்டை
வந்தனர் சந்தோஷமாய்;
அதைப் போல நாங்களும்
உம்மைத் தேட செய்திடும்
3. தாழ்ந்த முன்னணியிலே
தங்கள் காணிக்கைகளை;
படைத்தார்கள் முற்றுமாய்;
பாவமற்ற பொக்கிஷம்;
வான ராஜா கிறிஸ்துவே
உமக்கே படைக்கிறோம்
4. தூய இயேசுவே நீரே,
குறுகிய வழியில்;
எங்களை நடத்திடும்
நாங்கள் மோட்சம் சேரவும்;
உமது மகிமையை,
காணச் செய்யும் என்றுமே
5. ஜோதியான நாட்டுக்கே
வேறோர் ஒளி வேண்டாமே;
நீரே அதன் ஒளியும்,
அதன் கிரீடம் களிப்பும்;
அங்கே நம் ராஜனுக்கே
அல்லேலூயா பாடுவோம்