கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

Deal Score+2
Deal Score+2

கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்
காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட
சரணங்கள்
1. பொல்லாப் பகைஞர் கூட்டம்
எல்லாம் திரண்டு அங்கே
நல்லாயன் மீட்பர்தனைக்
கொல்லும் அவஸ்தை காண – கல்வாரிக்கு
2. சிவப்பங்கி தரித்தோராய்
சிரசில் முண்முடி சூண்டு,
தவத்தி லுயர்ந்த நாதன்
தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்வாரிக்கு
3. ஐயோ பிதாவே என்னை
ஏன் கைவிட்டீர் என்றழும்
துய்யன் துயர சத்தம்
தொனிக்கிற தங்கே இன்னம் – கல்வாரிக்கு
4. நாவு வறண்டதினால்
தாகங்கொண்டேன் என்றாராம்
பாவிகள் காடிதனைக்
கூடிக் கொடுத்தனராம் – கல்வாரிக்கு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo