KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics
LYRICS:-
கல்வாரியில் ஏகசுதன்
தொங்கியே மாண்டனரே
அழகற்றோராய் தேவ மைந்தன்
அந்தக்கேடடைந்தார்
குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு
பாவங்கள் ஏற்றவராய்
என் தேவனே கைவிட்டீரோ
கதறும் காட்சியிதே
மெய்யான பானம் மெய்யான போஜனம்
நித்திய ஜீவன் இவர்
என்றென்றுமாய் பிழைத்திட
பந்தியில் பங்கடைவோம்
சரீரமான சபையில் நம்மை
அன்புடன் இணைத்தாரே
இரத்தத்தினால் ஒப்பந்தம் செய்த
இயேசுவை பின்பற்றுவோம்