கண் கலங்காமல் காத்தீரையா – Kan Kalangamal Kathiraiya
கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன் – 2
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரையா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது
மகிமையின் கிரீடம் என்தலைமேல்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம் (2)
2. நோவா நடந்ததால் உம்கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லி
வெள்ளத்தில் இருந்து காத்தீரையா
உம்மோடு கூட…
3. ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சினேகிதன் என்றழைத்தீர்
செய்யப் போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை
4. உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச் செய்தீர்
5. நறுமணம் வீசும் காணிக்கையாய்
பலியாகி அன்பு கூர்ந்தீர்
அதுபோல நானும் அர்ப்பணித்தேன்
அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்
6. ஒளியாம் உம்மோடு நான் நடந்தால்
பிறர் அன்பில் நான் வளர்வேன்
உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி
தூய்மை படுத்தும் நிச்சயமே