Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்
பல்லவி
கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனே
தினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம்
சரணங்கள்
1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அற
கனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம்
2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்
இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம்
3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொரு
தீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம்
4. ஆகடியமாக முக் காட திட்டிராவெல்லாம்
ஏகனைப் பரிகாசமாய் ஈனர் குட்டவும் செய்தார்.- கனம்
5. கைச்சரசம் பண்ணினார்; காவல் மீதிருத்தினார்
அச்சமற்ற கந்தையாய் அநேக தூஷணன் சொன்னார். – கனம்
6. சங்க மீதிரண்டு பொய்ச்சாட்சிகள் எழுந்து
பங்கமான தோதினும், பரிந்து கேட்டிருந்தனர்.
7. பெத்தரிக்கமாகவே பேதுரு அப்போஸ்தலன்
சத்தியங்கள் பண்ணியே தான் மறுதலித்தனன்
8. கஸ்தியதுறச் சொல்லி, கனன் றெழுந்து ஆரியன்
வஸ்திரம் கிழித்துமே, மரணத் தீர்ப்பியற்றினன்