Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும்
1. கர்த்தாவே அடியார்க் கென்றும்
அடைக்கலம் நீரே;
புசலில் எம் புகலிடம்
நித்ய வீடும் நீரே
2. சிம்மாசன நிழலின் கீழ்
தம் தாசர் வசிப்பார்;
உம் கரம் போதுமானதே
எம் காவல் நிச்சயம்
3. பர்வதங்கள் தோன்றி பூமி
உருவாகு முன்னும்
அநாதியான தேவரீர்
மாறாதிருப்பீரே
4. ஆயிரம் ஆண்டு உமது
அநாதி பார்வைக்கு
நேற்றுக் கழிந்த நாள் போலும்
இராச்சாமம் போலுமாம்
5. காலம் வெள்ளம்போல் மாந்தரை
வாரிக் கொண்டோடுது,
மறந்துபோம் சொப்பனம்போல்
மறைகிறார் மாந்தர்
6. கர்த்தாவே அடியார்க்கென்றும்
அடைக்கலம் நீரே
இம்மையில் நீர் என் காவலர்
நித்திய வீடும் நீரே