Karunaa Karanae Paramae – கருணா கரனே பரமே
கருணா கரனே பரமே சுரனே
கனிவினை தீர்க்க வந்த தனிமுதல் ஏசுநாதா
பரன் ஆதியிலே திருவாய்மையிலே
பகுத்து விந்தையினோடு மகத்வ சந்தோடநீடு
பரிவுடனே அறுதின மதிலே உயர்
பரம் உலகியாவையும் அருளிய நேரமே
பாருலகந் தனில் ஓர் மனுடன் தனை
ஏவையர் என்றொரு பாவையுடன் செய்து
படர்ந்த காவிடை இரண்டு மரந் தர
அடர்ந்த ஜீவியம் நன்றறி வென்றொரு
பழத்திலே புசியாமல் விலக்கின
வழிப் படாது பசாசுட சொற்படி
பாவையர் ஆர்ந்தின தீவினையால் நர
தாவீது சேயென மேவு குணா நிதி
மறையாரணனே, நிறை பூரணனே
வலமைக்கொரே யோவாவே, தலைமைத் தேவாதி தேவே
வருகையை மாமறை இருடியர் ஓதின
வரிசையின் ஓர் தவி தரசனின் ஊர் அயல்
மந்தையின் ஆயர்கள் வந்து பணிந்தெழ
விந்தை மெய்ஞ் ஞானியர் சிந்தை உவந்திட
மகிழ்ந்து வானவர் பூதலர் பாதலர்
புகழ்ந்து பாடியும், ஆடியுமே தொழ
மரியவள் உந்தியில் அரிய பரன் திரு
மகனென அன்புடன் நரர் உருவங்கொடு
மானிடர் யாவரும் வானிடமே பெற
மாடடையுங் குடில் நீடிய சுந்தர