Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி

Deal Score0
Deal Score0

பல்லவி

கருணாகர தேவா, இரங்கி இந்தக்
கங்குலில் எனைக் கா வா.

அனுபல்லவி

இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக. – கரு

சரணங்கள்

1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச்
சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து;
நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி
நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. – கரு

2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து
நெருங்காமல் நீ எழுந்து, நிலை புரிந்து,
சுத்தநெஞ்சோ டமைந்து தூங்க நல் துயில் தந்து,
தூதர் காவல் நிறைந்து, துணையாய் என்னோடிருந்து. – கரு

3. தாதா, அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே, என்னைத்
தாங்குவதார் பின்னை, சார்வன் நின்னை;
வேதா, நான் உன் தொண்டு வினைஞன் என் நிலை கண்டு,
மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தணைத்துக்கொண்டு. – கரு

4. தீய எண்ணங்கள் பாற, திகில் கனவுகள் மாறத்,
திவ்ய சிந்தை உள் ஊற, ஸ்திரம் ஏறக்,
காயம் உயிரும் கூடக், கருத்துன்னோ டுறவாடக்,
காலை நல்லறம் நாடக், கரிசித்துன் துதி பாட. – கரு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo