Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல்
1. கேட்கும் யாரென்றாலும் சொல், சொல் செய்தி
திவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு;
எந்த தேசத்தார்க்கும் அதைப் பரப்பு
யாரென்றாலுஞ் சேரலாம்
பல்லவி
யாவனென்றாலும் யாவனென்றாலும்,
என்றுமிந்தச் செய்தி எங்குங் கூறலாம்
பாவி வா! பிதா அன்பாய் அழைக்கிறார்
யாரென்றாலுஞ் சேரலாம்
2. வாரும் யாரென்றாலும் தாமதிப்பதேன்?
வா! திறந்தார் வாசல் உட்செல்லாததேன்?
ஜீவ பாதை ஒன்றே! இயேசுதான்! வாரீர்;
யாரென்றாலுஞ் சேரலாம் – யாவனென்றாலும்
3. வாக்கை யாரென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்;
எவர்க்கும் இவ்வாக்கு என்றும் நிற்குமாம்;
யாரென்றாலும் நித்திய ஜீவன் காணலாம்
யாரென்றாலுஞ் சேரலாம் – யாவனென்றாலும்