Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை
1. கெட்டுப்போன மாந்தரை
இயேசு ஏற்றுக் கொள்ளுவார்
பாவ ஆத்துமாக்களை
குணமாக்கி இரட்சிப்பார்
பல்லவி
நல்ல செய்தி கேளுமேன்
இயேசு ஏற்றுக் கொள்ளுவார்
நம்பி வாரும் வாருமேன்
தள்ளிப் போடவே மாட்டார்
2. இளைப்பாறல் தருவேன்
நம்பி வாரும் என்கிறார்
யாரானாலும் வாருமேன்
பாவப் பாரம் நீக்குவார் – நல்ல
3. மாசில்லாத இரத்தத்தால்
சர்வ சுத்தம் ஆக்குவார்
தூய வல்ல ஆவியால்
தீய சுபாவம் மாற்றுவார் – நல்ல