Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே
கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2
முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2
என் இயேசு தொங்குகிறார்.
1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2
குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2
கல்மனம் உருகிடுமே
2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2
என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2
உம் அன்பு இணையற்றதே
3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர் அணிந்தீரோ முள்முடியை -2
காயங்கள் அடைந்த கரங்களை கண்டு கர்த்தரை போற்றிடுவேன் -2