KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்

Deal Score0
Deal Score0

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

சரணங்கள்

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடு

https://www.youtube.com/watch?v=d_PbrOdw-8Q
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo