Maangal Neerodai Vaanjikum – மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்
1. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்
தாகம் கொள்ளும்போது
என் ஆத்துமா அதுபோல
கிருபைக்காய் வாஞ்சிக்கும்
2. என் ஜீவனுள்ள தேவனே
என் தாகம் அதிகம்
உம் முகத்தை தேடுகிறேன்
மகத்வம் தெய்வீகம்
3. சந்தோஷமான நாளுக்காய்
ஏங்கி தவிக்கின்றேன்
இதயம் உம்மை போற்றிடும்
ஆசீர் அடைகின்றேன்
4.என் ஆத்மாவே ஏன் கலக்கம்
நம்பி நீ பாடிடு
உன் தேவனை துதித்திடு
சுகமாய் வாழ்ந்திடு