Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

Deal Score+1
Deal Score+1

மானிடர் பாவம் போக்கவே
பாரில் இரட்சகர் வந்துதித்தார்
இன்னல்கள் பல துன்பங்கள்
போக்கவே வந்துதித்தார்

மரத்தின் கனியினால்
அன்று பாவம் சூழ்ந்தது
மரத்தின் சிலுவையால்
இன்று பாவம் தீர்ந்தது-மானிடர்

1.ஆதியில் தோன்றிய
பாவத்தை போக்கவே
தேவனின் குமாரனே
உலகில் வந்துதித்தார்-2

உன்னை மீட்க வந்த தேவன்
இன்று உன்னை அழைக்கின்றார்
உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின்

2.நித்திய வாழ்வினை
மானிடர் பெற்றிடவே
தேவனின் குமாரனே
நம்மை மீட்க வந்தார்-2

ஜீவ கிரீடம் பெற்றிடவே
இன்று உன்னை அழைக்கின்றார்
அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo