MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics
மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன்
கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன்
நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டை
நீரே எந்தன் கன்மலை ஆனீர்
நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்
உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்
உயிர் உள்ளவரை ஆராதிப்பேன்
பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்
ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர்
என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர்
உம் கிருபையினால் என்னை உயிர்ப்பித்தீர்
கால்கள் தவறும் போது என்னை விழாமல் காத்தீர்
கைகள் இடரும் போது என்னை கைவிடாமல் காத்தீர்
உம் கோபம் ஓர் நிமிடமே உம இரக்கம் மிகவும் பெரிதே
உம் அன்பு என்றும் மாறாததே