Magimaiyai Vittu Boomi vanthu song lyrics – மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை

Deal Score0
Deal Score0

Magimaiyai Vittu Boomi vanthu song lyrics – மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை

மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை மீட்டிட பிறந்தீரே
மகிமையில் தூதர்கள் சூழ நீர் மேகம் மீதில் வருவீர்

பசியாயிருந்தேன் நீ எனக்கு போஜனம் கொடுத்தாயே
தாகமாயிருந்தேன் நீ எனக்கு தண்ணீர் கொடுத்தாயே
வா என்னண்டை (என்) பிதாவினால் ஆசி பெற்றவனே
வா என்னண்டை (என்) பிதாவினால் ஆசி பெற்றவளே

மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை மீட்டிட பிறந்தீரே
மகிமையில் தூதர்கள் சூழ நீர் மேகம் மீதில் வருவீர்

வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு வஸ்திரம் கொடுத்தாயே
வியாதியாக இருந்தேன் என்னை விசாரித்தாயன்றோ
சிறியவனான சகோதரனுக்கு செய்தது எனக்கல்லோ
சிறியவளான சகோதரிக்கு செய்தது எனக்கல்லோ

மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை மீட்டிட பிறந்தீரே
மகிமையில் தூதர்கள் சூழ நீர் மேகம் மீதில் வருவீர்

காவலிலிருந்தேன் நீ என்னை பார்க்க வந்தாயே
அந்நியனாக இருந்த என்னை சேர்த்து கொண்டாயே
ஆயத்தமான இராஜ்ஜியத்தை சுதந்தரி என் மகனே
ஆயத்தமான இராஜ்ஜியத்தை சுதந்தரி என் மகளே

மகிமையை விட்டு பூமி வந்து மாந்தரை மீட்டிட பிறந்தீரே
மகிமையில் தூதர்கள் சூழ நீர்மேகம் மீதில் வருவீர்

Nee ennum en rakshakan, Malayalam Christian song transaltion in tamil

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo