Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே

Deal Score0
Deal Score0

பல்லவி

மனந்திரும்பு மானிடனே – உடனே!
தினந்தனை வீணாய்க் கழியாதே!

சரணங்கள்

1. காலம் விலையுள்ளது கடத்தாதே
ஞாலமதில் ஜீவன் நிலையாதே!
காலமும் மரணமும் கடுகிடுது
சீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு – மனம்

2. கிருபையின் காலத்தை இழக்காதே!
திருவசனத்தை அவமதியாதே
தருணமறிந்து உணர்வடைவாயே
மரணம் வருது குணப்படுவாயே! – மனம்

3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமே
மாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே!
தீய வழியை விட்டு திரும்பாயோ?
தூயனைத் தேடி இரட்சை அடையாயோ? – மனம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo