Mangala Shobanam – மங்கள சோபனம்

Deal Score0
Deal Score0

பல்லவி

மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம்

அனுபல்லவி

தங்கிடச் சந்ததமும்
சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா!

சரணங்கள்

1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த
விந்தைபோ லிம் மணர்க்கும்;
வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் – மங்கள

2. சுத்த மறை தழுவ தூய நடையெழுக
பக்தி புனைந்திலங்க;
கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே – மங்கள

3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,
நித்திய சிலாக்கியங்கள்;
நீட பரிபூரணராய் நேமி தழைக்க – மங்கள

4. சோதனைகள் ஜெயிக்க சாதனைகள் ஜொலிக்க
நாதனுக்காய் உழைக்க;
நாட்டமுடனே இசைந்து நாட் களிக்கவே – மங்கள

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo