Mannana Manithan Ennai song lyrics – மண்ணான மனிதன் என்னை

Deal Score+2
Deal Score+2

Mannana Manithan Ennai song lyrics – மண்ணான மனிதன் என்னை

1.மண்ணான மனிதன் என்னை
கண்ணோக்கி பார்த்தீரய்யா-2
துதிப்பேன் உம்மை புகழ்வேன்
என் ஆயுள் நாளெல்லாம்-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

2.காலை தோறும் புதுக்கிருபை
நாள்தோறும் தந்தீரய்யா-2
என்னையும் நினைத்திடும்
உம் பாசம் பெரியது-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

3.துன்பங்கள் மறந்திட செய்தீர்
கண்ணீரை களிப்பாக்கினீர்-2
என்ன நான் சொல்லுவேன்
உம் மாறிடா நேசத்தை-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

4.என் உள்ளம் உம்மில் மகிழும்
என்றென்றும் உம்மைப் போற்றும்-2
நல்லவர் நீர் வல்லவர்
என்றும் என்னை காண்பவர்-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo