Marunthu Kandenae – மருந்து கண்டேனே

Deal Score0
Deal Score0

பல்லவி

மருந்து கண்டேனே – நானொரு
மருந்து கண்டேனே

சரணங்கள்

1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து
வளர் பெத்லகேமில் வந்த மருந்து
திருச் செயல்களைச் செய்த மருந்து,
தீன தயாபரனாகிய மருந்து! – மருந்து

2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து
அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து
பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து
பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! – மருந்து

3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து,
தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து
மூர்க்கர் கையிலகப்பட்ட மருந்து,
மூவரி லொருவரான மருந்து! – மருந்து

4. பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!
பூரண விடுதலை தந்த மருந்து
கூசாமல் அற்புதஞ் செய்த மருந்து
குருவாகப் புவியிலுதித்த மருந்து! – மருந்து

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo